சூர்யா 5
பாலா இயக்கத்தில் "வணங்கான்' படத்தில் நடித்து வரும் சூர்யா, இதனிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் "சூர்யா 42' படத்திலும் நடித்து வருகிறார். கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வரும் இப்படம், 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பைச் சென்னையில் நடத்திவரும் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பைக் கோவாவில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாம். மேலும் அங்கு முக்கியான சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட படத்தின் 50 சதவீத காட்சிகளை படமாக்கவும் படக்குழு முடிவெடுத்துள்ளதாம். இந்தநிலையில் சூர்யா இப்படத்தில் 5 கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம். அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டரில் "அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார்' என்ற பெயர்கள் இடம் பெற்றிருந்தது. "இவைதான் சூர்யா நடிக்கும் 5 கதாபாத்திரங்களின் பெயர்கள்' என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த படத் தின் பணிகளை முடித்த பிறகு அடுத்த ஆண்டு தான் வெற்றிமாறன் இயக்கும் "வாடி வாசல்' படத்தில் நடிக்கவுள்ளாராம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_153.jpg)
சண்டை பழகும் யாஷ்!
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான "கே.ஜி.எஃப்' படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். "கே.ஜி.எஃப் 2' படம் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து, விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து யாஷின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. இந்தநிலையில்தான் யாஷின் அடுத்த படத்தை "முஃப்தி' படத்தை இயக்கிய நாரதன் இயக்குகிறார். தற்காலிகமாக "யாஷ் 19' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறாராம். இந்த படம் வரலாற்றுப் பின்னணியில், பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாம். மேலும் இந்த படத்தில் "கே.ஜி.எஃப்' படத்தைப் போன்றே சண்டைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால், யாஷ் அதற்கான பயிற்சிகளில் தற்போது முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறாராம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_110.jpg)
பரபரப்பாகும் பரத்!
தமிழ் சினிமாவில் "செல்லமே', "சேவல்', "காதல்', "கண்டேன் காதலை', "எம் மகன்' உள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் பரத். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எதுவுமே ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் தொடர்ந்து "லவ்', "முன்னறிவான்', "மிரள்' ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன், பரத்தை வைத்து வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். தொடர் தோல்விப் படங்கள் காரணமாக துவண்டிருக் கும் பரத், இந்த தொடரைத்தான் முழுவதும் நம்பியிருக்கிறாராம். ஏற்கனவே வசந்தபாலன்-பரத் கூட்டணியில் வெளியான "வெயில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, அந்தாண்டின் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் வசந்தபாலன்-பரத் கூட்டணி இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர்மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குத்தாட்டத்தில் மலைகா!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் "புஷ்பா'. செம்மரக் கடத்தலை மையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தென்னிந்திய மொழிகளை தாண்டி வட மாநிலங்களிலும் வசூலை வாரிக் குவித்தது. படத்தை போலவே, பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக சமந்தா நடனமாடிய "ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. "புஷ்பா' இரண்டாம் பாகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் சுகுமார் முதல் பாகத்தில் சமந்தா நடனமாடிய "ஊ சொல்றியா மாமா' பாடலை போலவே, இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்துப் பாடலை வைக்க திட்ட மிட்டுள்ளாராம். இதற்காக இந்தியாவின் முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவந்த படக்குழு, இறுதியில் பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவை டிக் செய்துள்ளதாம். இந்த பாடல் "ஊ சொல்றியா மாமா' பாடலை விட பிரம்மாண்ட மாகவும், கலர்ஃபுல்லாகவும் எடுக்கப்படவுள்ளதாம்.
-அருண்பிரகாஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/cinema-t_2.jpg)